Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புது மருந்து கண்டுபிடிப்பு - ரஷியா தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புது மருந்து கண்டுபிடிப்பு - ரஷியா தகவல்

By: Monisha Mon, 25 May 2020 11:57:54 AM

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புது மருந்து கண்டுபிடிப்பு - ரஷியா தகவல்

ரஷிய நாட்டில் கொரோனா வைரஸ் சமீப காலமாக அதிகளவில் பரவி வருகிறது. ரஷியாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரஷியாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம், ‘அரேப்லிவிர்’ என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இதுபற்றி மருந்து ஆராய்ச்சி பொறுப்பாளரும், நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் கூறியதாவது:- நாங்கள் உருவாக்கியுள்ள மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்துப்பார்க்கும் மருத்துவ பரிசோதனையை 4 முதல் 8 வாரங்களில் முடித்துக்கொண்டுவிடுவோம்.

corona patient,treatment,new drug discovery,russia,corona virus ,கொரோனா நோயாளி,சிகிச்சை,புது மருந்து கண்டுபிடிப்பு,ரஷியா,கொரோனா வைரஸ்

அதன்பின்னர் மருந்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்போம். இந்த மருந்தினை மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்போம். அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், மார்டோவியாவிலும் இந்த மருந்தை கொடுத்து பரிசோதிப்போம்.

முதல் கடடமாக நடுத்தர தீவிரத்தன்மை கொண்ட நோயாளிகளுக்கு கொடுப்போம். தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து இன்னும் பயன்படுத்தப்படவில்லை. முதலில் இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதிருக்கிறது. ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்குள் இந்த மருந்து உருவாக்கப்படும் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|