Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் 14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்; தமிழக அரசு அறிவிப்பு

By: Monisha Thu, 15 Oct 2020 4:10:24 PM

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்ய தமிழக முதல்வரே காரணம் என்று கூறப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்தும் இந்திய தொழில் நிறுவனங்களில் இருந்தும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு வாய்ப்பு எற்படுத்திக் கொடுத்தார்.

தற்போது தமிழகத்தின் 14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்காக ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

tamil nadu,factories,contracts,investment,windmill ,தமிழ்நாடு,தொழிற்சாலைகள்,ஒப்பந்தங்கள்,முதலீடு,காற்றாலை

இந்த 14 மாவட்டங்களில் முதல் கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பூரில் 810 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ரூ.6,300 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சென்னை அருகே டேட்டர் சென்டர் திட்டத்தை அமைப்பதற்காக ரூ.750 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. மேலும் சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலைகளை தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டமும் மேற்கொள்ளப்பட உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா எனப் பல நாடுகள் சார்பில் இந்தத் திட்டங்கள் செயல்பட இருக்கின்றன என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :