Advertisement

WhatsApp செயலியில் Statusல் புதிய அம்சம்

By: vaithegi Wed, 18 Jan 2023 5:59:42 PM

WhatsApp செயலியில் Statusல் புதிய அம்சம்

இந்தியா: உலகம் முழுவதும் WhatsApp செயலியை சிறுவர் முதல் பெரியவர் வரை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் இந்த செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

எனவே அதன்படி WaBetaInfo ஆனது WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதனை அடுத்து இந்த அறிக்கையில், தற்போது WhatsApp செயலியில் நீங்கள் உங்களுக்கு தெரியும் Statusக்கு Text அல்லது Emoji மூலமாக பதிலளிக்க முடியும்.

whatsapp,new feature ,WhatsApp புதிய அம்சம்

இதையடுத்து இந்த நிலையில் தற்போது Voice Notes மூலமாகவும் பதிலளிக்கூடிய வகையில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் 30 நிமிடம் வரையிலான Voice Notes-ஐ அனுப்பலாம்.மேலும் ஏற்கனவே Status வாயிலாக நீங்கள் பதிலளிக்கும் Text அல்லது Emoji உள்ளிட்டவை 24 மணி நேரத்தில் மறைந்து விடும்.

மேலும் இதே போன்று Status வாயிலாக நீங்கள் அனுப்பும் Voice Notes-ம் 24 மணி நேரத்தில் மறைந்து விடும். அத்துடன் நீங்கள் Voice Notes-ஐ அனுப்புவதற்கு முன்பாக Delete செய்யவும் முடியும்.

Tags :