Advertisement

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்

By: vaithegi Thu, 23 Mar 2023 11:46:43 AM

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்


இந்தியா:விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான புதிய வாட்ஸ் அப் பயன்பாட்டை, மெட்டா நிறுவனம் அறிமுகம் .. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியானது, அவ்வப்போது பயனர்களின் வசதிக்கேற்ப, அதன் புதிய அம்சத்தை வெளியிட்டுக்கொண்டு வருவது தற்போது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனமானது, விண்டோஸ் பயன்பாட்டில் வாட்ஸ்அப் செயலியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான புதிய வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலம், வேகமாக செயல்படும் வகையில் வீடியோ அழைப்புகளில் 8 பேர், மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கு 32 பேர் என்று செயல்படுத்துகிறது. இந்த விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான புதிய வாட்ஸ் அப், மொபைல் பயன்பாட்டை போல தடையின்றி வேகமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

whatsapp,meta company ,வாட்ஸ் அப்,மெட்டா நிறுவனம்


நீங்கள் இப்போது 8 நபர்களுடன் குழு வீடியோ அழைப்புகளையும், 32 பேர் வரை ஆடியோ அழைப்புகளையும் நடத்தலாம். இந்த வரம்புகளை வரும் காலங்களில் தொடர்ந்து அதிகரிப்போம், எனவே இதன் மூலம் நீங்கள் எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், டேப்லெட்டுகள் மற்றும் பலவற்றிற்கு இடையே தகவல்-தளத்தில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் முழுமையான என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்தி அனுபவத்தை வழங்குவதற்கான மிகப்பெரிய தளமாக வாட்ஸ் அப் உள்ளது.

மேலும் மேக் டெஸ்க்டாப் களிலும், வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறோம், ஆனால் இது தற்போது பீட்டா பயன்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பை இன்னும் பல சாதனங்களில் கொண்டு வர முயற்சித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளது.

Tags :