Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன

விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன

By: Nagaraj Sat, 31 Dec 2022 9:50:33 PM

விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன

புதுடெல்லி: புதிய வழிகாட்டுதல்கள்... சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நோய் எதிர்ப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது.

airport,corona,regulations, ,கொரோனா, வழிகாட்டுதல்கள், விமான நிலையம்

பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஏர்சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 6 நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம். பயணிகள் தாங்கள் சில நோய்த்தொற்றுகளிலிருந்து விடுபட்டதாக உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
|