Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Mon, 24 July 2023 7:38:36 PM

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாட்டின் வட இந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

24 hours,area,barometric pressure,center,india,information,low,survey,weather , ஆய்வு, 24 மணி நேரம், இந்தியா, காற்றழுத்தம், தாழ்வு, மையம், வானிலை

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை நீடிக்கும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|
|
|