Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .. 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .. 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 21 July 2023 11:29:56 AM

ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .. 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வருகிற 22, 23 மற்றும் 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

monsoon,odisha,low pressure area. ,மழை,ஒடிசா , காற்றழுத்த தாழ்வுப் பகுதி .


இதையடுத்து ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை 8 மணியளவில் பதிவான மழை அளவுகளின்படி கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ., வால்பாறை, சின்கோனா, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல்கூடலூர், சாம்ராஜ் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, ஊத்து ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|