Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வரைபட சட்டத்திருத்த மசோதா நேபாள மேலவையில் நிறைவேற்றம்

புதிய வரைபட சட்டத்திருத்த மசோதா நேபாள மேலவையில் நிறைவேற்றம்

By: Nagaraj Thu, 18 June 2020 8:37:32 PM

புதிய வரைபட சட்டத்திருத்த மசோதா நேபாள மேலவையில் நிறைவேற்றம்

இந்தியாவின் கண்டனத்தை மீறி, சர்ச்சைக்குரிய புதிய வரைபட சட்டத்திருத்த மசோதா (The New Map Amendment Bill) நேபாள நாடாளுமன்ற கீழவையை தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா பகுதிகளை (Lipulekh, Kalapani and Limpiyadhura in India's Uttrakhand) தங்கள் நாட்டுக்கு சொந்தமான பகுதியாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது.

இப்பகுதிகளை உள்ளடக்கிய வரைபட புதிய மசோதாவை தயாரித்து, நேபாள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அரசு அண்மையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

bill,execution,nepal,india,severe condemnation ,
மசோதா, நிறைவேற்றம், நேபாளம், இந்தியா, கடும் கண்டனம்

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் நேபாள நாடாளுமன்ற மேலவைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. அந்த சபையிலும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையில் இருந்த 57 எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். யாரும் மசோதாவை எதிர்க்கவோ, அல்லது மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்கவோ இல்லை.

Tags :
|
|
|