Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க புது முகக்கவசம் - இஸ்ரேல் கண்டுபிடிப்பு

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க புது முகக்கவசம் - இஸ்ரேல் கண்டுபிடிப்பு

By: Monisha Fri, 19 June 2020 1:44:21 PM

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க புது முகக்கவசம் - இஸ்ரேல் கண்டுபிடிப்பு

உலக மக்கள் அனைவரையும் பீதி அடைய செய்து வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வரை சமூக இடைவெளியும் முகக்கவசமும்தான் நோய் பரவலை தடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது. என்னதான் முகக்கவசம் போன்ற பாதுகாப்போடு சென்றாலும் கொரோனா வைரஸ் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பயத்தைப் போக்கும் விதமாக தற்போது ஒரு அதி நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் டெக்னியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முகக்கவசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரஸ்களை கொல்லும் விதமாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு மாஸ்க்கிலும் ஒரு யு.எஸ்.பி போர்ட் இருக்கும். செல்போன்களை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முகக்கவசத்தை சார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.

corona virus,mask,israel,germs,invention ,கொரோனா வைரஸ்,முகக்கவசம்,இஸ்ரேல்,கிருமிகள்,கண்டுபிடிப்பு

அப்படி பயன்படுத்தும்போது முகக்கவசத்திற்குள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் செலுத்தப்பட்டு வைரஸ் கிருமிகள் முழுமையாக அழிக்கப்படும். மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எந்த உறுதியான பாதுகாப்பும் இல்லாத நிலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|
|