Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்குவங்காளத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை தற்போதைக்கு அமல்படுத்தப்படாது - பார்த்தா சாட்டர்ஜி

மேற்குவங்காளத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை தற்போதைக்கு அமல்படுத்தப்படாது - பார்த்தா சாட்டர்ஜி

By: Karunakaran Tue, 08 Sept 2020 12:25:59 PM

மேற்குவங்காளத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை தற்போதைக்கு அமல்படுத்தப்படாது - பார்த்தா சாட்டர்ஜி

இந்தியாவில் 1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கிடைத்தாலும் சில மாநிலங்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ‘உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்வி கொள்கை 2020-ன் பங்கு’ என்ற தலைப்பில், புதிய கல்வி கொள்கை தொடர்பான கவர்னர்கள் மாநாடு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில கல்வி மந்திரிகள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

new national education policy,west benga,partha chatterjee,education minister ,புதிய தேசிய கல்வி கொள்கை, மேற்கு பெங்கா, பார்த்தா சாட்டர்ஜி, கல்வி அமைச்சர்

இந்த மாநாட்டில் மேற்கு வங்காள மாநிலம் சார்பில் கலந்து கொண்ட மாநில கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மாநாட்டிற்கு பின் அளித்த பேட்டியில், தற்போதைக்கு மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வாய்ப்பில்லை. அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், நாட்டின் கூட்டாட்சி கண்காணிப்பையும் மாநிலங்களின் பங்கையும் குறை மதிப்பிற்கு உட்படுவதால் தேசிய கல்வி கொள்கையின் சில அம்சங்களை பற்றி நாங்கள் எங்கள் இட ஒதுக்கீட்டை வெளிப்படுத்தியுள்ளோம். தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :