Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று டில்லியில் புதிய உச்சம்; 2224 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று டில்லியில் புதிய உச்சம்; 2224 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 14 June 2020 11:19:08 PM

இன்று டில்லியில் புதிய உச்சம்; 2224 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்... தலைநகர் டில்லியில், புதிய உச்சமாக இன்று(ஜூன் 14) ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 56 பேர் பலியாகினர்.

டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப்பின், டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த 6 நாட்களில், பரிசோதனை 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

department of health,2224,impact,delhi,corona ,சுகாதாரத்துறை, 2224 பேர், பாதிப்பு, டில்லி, கொரோனா

இந்நிலையில், டில்லியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 56 பேர் பலியாகினர்.

இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 41,182 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 1,327 ஆனது. இதுவரை 15,823 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|