Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டம்

அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டம்

By: Monisha Mon, 31 Aug 2020 4:55:31 PM

அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டம்

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இத்திட்டத்தை கொரோனா நேரத்தில் அமல்படுத்துவது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் வகையிலான புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா நேரத்திலும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை, முதலீடு ஈர்ப்பு எனப் பல்வேறு திட்டங்களை சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது புதிய யுக்தியை கையாள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ration shop,ration items,investment,minister cellur raju ,ரேஷன் கடை,ரேஷன் பொருட்கள்,முதலீடு,அமைச்சர் செல்லூர் ராஜு

இதனால் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நெரிசலை குறைக்க அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விலை இல்லா பொருட்கள் அடுத்த மாதம் முதல் வீடு தேடி வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவை ரேஷன் கடைகளை மூடுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் இந்த அதிரடியான திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

அதைத்தவிர உயர்க்கல்வியில் தமிழக மாணவர்களின் சேர்க்கை விகிதம் இந்திய அளவில் மிக உயர்ந்து சாதனை படைத்த மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைப் பொருட்கள் அடுத்த மாதம் முதல் வீட்டுக்கே கொண்டு வரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

Tags :