Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்கள் விற்பனை புதிய திட்டம் ..அரசு பரிசீலனை

ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்கள் விற்பனை புதிய திட்டம் ..அரசு பரிசீலனை

By: vaithegi Sat, 09 July 2022 1:34:32 PM

ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்கள் விற்பனை புதிய திட்டம் ..அரசு பரிசீலனை

தமிழகம்: தமிழக அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலைகளில் பல அத்தியாவசிய பொருட்களை பெற்று பல லட்சக்கணக்கான பயனர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இப்போது, தமிழகம் முழுவதும் மொத்தம் 35,323 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 10,279 நியாய விலைக்கடைகள் பகுதிநேர கடைகள்.

ஒரு சில மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பில் புதிய ரேஷன் கடைகளை அமைப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

sales,ration shop ,விற்பனை ,ரேஷன் கடை

அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் இப்போது பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போது சோதனை முறையில் இருக்கும் நிலையில், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அடுத்தக்கட்ட முடிவுகளை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கடைகளை அமைத்து மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. இதற்காக தகுதியுள்ள நியாய விலைக்கடைகளை கண்டறியும் முயற்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|