Advertisement

முதல்வர் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம்

By: Nagaraj Thu, 09 June 2022 10:16:13 PM

முதல்வர் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம்

சென்னை: முதலமைச்சர் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு துணை ஆணையர் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு துணை ஆணையர் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 26 கூடுதல் எஸ்.பிக்களை , எஸ்பி களாக பதவி உயர்வு அளித்து ,பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு அதிகாரியை,கரூர் காகித நிறுவன ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான காலியாக உள்ள இடங்களில் பதவி உயர்வு பெற்ற எஸ்பி கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் தொகுதியை மையமாக வைத்து புதிதாக காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

deputy commissioners,change of workplace,promotion,announcement,positions ,துணை ஆணையர்கள், பணியிட மாற்றம், பதவி உயர்வு, அறிவிப்பு, பதவிகள்

சென்னை மாநகர காவல் ஆணையர் அகத்தின் கீழ் செயல்படும், இந்த கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு துணை ஆணையராக ராஜா ராம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் காவல் மாவட்டத்தின் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் அண்ணா நகர் மற்றும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு இணைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவில் சப்ளை சிஐடியில் புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டு அதில் பதவி உயர்வு பெற்ற ஸ்பிகல் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் சிவில் சப்ளை சிஐடி எஸ்பி பதவிகள் உருவாக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மாதவரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய காவல் மாவட்டத்திற்கும் புதிதாக துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :