Advertisement

ரேஷன் கடைகளில் இனி புதிய நடைமுறை

By: vaithegi Sat, 31 Dec 2022 3:56:40 PM

ரேஷன் கடைகளில் இனி புதிய நடைமுறை

இந்தியா: தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும் ... நாட்டின் மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியாக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாநில அரசு குறிப்பிட்ட எடையில் இலவச அரசியை வழங்குவதோடு, மத்திய அரசும் மக்களுக்கு என மாநில வாரியாக இலவச அரிசியினை ஒதுக்கீடு செய்து வழங்கி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இதுநாள் வரையிலும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கும் அரசிக்கு என ஒரே ரசீது தான் மக்களுக்கு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

ஆனால், அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சார்பில் தற்போது புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

ration shop,receipt ,ரேஷன் கடை,ரசீது

இதையடுத்து அதில், 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மத்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டின் படி வழங்கப்படும் அரிசிக்கு என்று தனி தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோ அரிசி மொத்தமாக வழங்கும் நிலையில், அதில் மத்திய அரசின் 15 கிலோ அரசிக்கு தனி ரசீதும், தமிழக அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கு தனி ரசீதும் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தான் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :