Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்னி பேருந்துகளுக்கான குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் விரைவில் வெளியாகக் கூடும்

ஆம்னி பேருந்துகளுக்கான குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் விரைவில் வெளியாகக் கூடும்

By: vaithegi Wed, 28 Sept 2022 6:12:08 PM

ஆம்னி பேருந்துகளுக்கான குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் விரைவில் வெளியாகக் கூடும்

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியலை வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குறைந்த பட்சம் 2500 முதல் அதிபட்சம் 4ஆயிரம் ரூபாய் வரையும்,அதேபோன்று சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்த பட்சம் 2800 முதல் அதிபட்சம் 3200 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.

new fare list,omni bus , புதிய கட்டண பட்டியல், ஆம்னி பேருந்து

மேலும் சென்னையில் இருந்து மதுரை , திருச்சி , தூத்துக்குடி , கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்து உள்ளது .

இதனைத்தொடர்ந்து தன்னிச்சையாக கட்டண உயர்வை அன்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கட்டணங்களை குறைத்து புதிய பட்டியல் வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags :