Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமல்

இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமல்

By: Karunakaran Tue, 09 June 2020 4:30:15 PM

இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமல்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இங்கிலாந்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, இங்கிலாந்து மக்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் அயர்லாந்து, சேனல் தீவு, மனித தீவுவாசிகளுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, விமானம், ரெயில், படகு என எந்த போக்குவரத்து சாதனத்தில் சென்றாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

corona,england,isolation,the new rule ,கொரோனா,இங்கிலாந்து,தனிமைப்படுத்துதல்,புதிய விதிமுறை

தனிமைப்படுத்திக்கொள்வதற்கான முகவரியை தராவிட்டால், அரசு செலவில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். தனிமைப்படுத்துதல் விதியை அவர்கள் பின்பற்றுகிறார்களா என தீவிரமாக கண்காணிக்கப்படும். 14 நாட்களுக்கு இந்த புதிய விதிமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேலைக்கு போகக்கூடாது. பள்ளி, பொது இடங்கள் என எங்கும் போகக்கூடாது. அவர்களை பார்க்க வேறு யாரும் வரவும் கூடாது. இந்த புதிய விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டாயமாக 14 நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை இதனை மீறினால், அவர்களுக்கு 1000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|