Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு

கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு

By: vaithegi Fri, 18 Aug 2023 10:05:20 AM

கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை ,பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள நிலையில், இங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வருகை புரிந்து கண்டு ரசிப்பது வழக்கமான ஒன்று. இதையடுத்து கடந்த சில தினங்களாக வாகனம் நிறுத்தும் இடம் , கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் தற்போது இங்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 40- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எனவே இதன்காரணமாக கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

kodaikanal,tourists ,கொடைக்கானல் , சுற்றுலா பயணிகள்


இந்நிலையில் அந்த தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்பட உள்ளது. எனவே அதன்படி, கொடைக்கானலில் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் இன்று (18-8-2023) திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை ஆகியவை இன்று திறக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக், காப்பீட்டு சான்று, மாசு கட்டுப்பாட்டு சான்று வைத்திருக்க வேண்டும் என்று வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.


Tags :