Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹங்கேரியில் எல்லை தாண்டிய பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஹங்கேரியில் எல்லை தாண்டிய பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடு

By: Nagaraj Mon, 13 July 2020 12:09:51 PM

ஹங்கேரியில் எல்லை தாண்டிய பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடு

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு... பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அடுத்த புதன்கிழமை முதல் ஹங்கேரி எல்லை தாண்டிய பயணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மே மாதத்தில் ஹங்கேரி தனது முடக்க கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு, அதன் எல்லைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயணிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அல்லாத அண்டை நாடுகளுக்கும் திறந்தது.

முடக்க நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக கொரோனா வைரஸை “எல்லைகளுக்கு வெளியே” வைத்திருக்க புதிய கட்டுப்பாடுகள் தேவை என அந்நாட்டு உயர் அதிகாரி தெரிவித்திருந்தார்.

travel control,albania,kosovo,list ,பயணக் கட்டுப்பாடு, அல்பேனியா, கொசோவோ, பட்டியல்

அத்தோடு இந்த கட்டுப்பாடுகள் எங்கள் சுதந்திரத்தை பாதுகாக்க உதவுகின்றன என்றும் பிரதமர் விக்டர் ஆர்பனின் தலைமை அதிகாரி கெர்கெலி குல்யாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய விதிகளின் கீழ், “மஞ்சள்” மற்றும் “சிவப்பு” என பட்டியலிடப்பட்ட உயர் ஆபத்துள்ள நாடுகளிலிருந்து திரும்பும் ஹங்கேரிய நாட்டவர்கள் எல்லையில் சுகாதார சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டி இருக்கும்.

மேலும் அவர்கள் தொற்றுநோயாக இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கெர்கெலி குல்யாஸ் கூறியுள்ளார்.

அந்தவகையில் செர்பியா, பல்கேரியா, போர்த்துகல், ருமேனியா, ரஷ்யா, சுவீடன் மற்றும் பிரித்தானியா ஆகியவை “மஞ்சள்” என்று பட்டியலிடப்பட்ட நாடுகள் ஆகும். அல்பேனியா, கொசோவோ, மாண்டினீக்ரோ மற்றும் அண்டை நாடான உக்ரைன் ஆகியவை சிவப்பு பட்டியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|