Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறு வணிகர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய புதிய திட்டம்

சிறு வணிகர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய புதிய திட்டம்

By: Monisha Sun, 20 Dec 2020 3:28:29 PM

சிறு வணிகர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய புதிய திட்டம்

ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் சிறிய வணிகர்கள் இது வரை மாதம் தோறும் ஜி.எஸ்.டி. வரி செலுத்திவிட்டு கணக்கு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிறிய வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக ‘கி.யூ.ஆர். எம்.பி’ என்னும் காலாண்டு கணக்கு தாக்கல் மாதாந்திர வரி செலுத்துதல் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

merchants,revenue,accounting,planning,simplicity ,வணிகர்கள்,வருவாய்,கணக்கு,திட்டம்,எளிமை

இந்த திட்டம் வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள் மாதம் தோறும் ஜி.எஸ்.டி.வரி செலுத்தி விட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யலாம்.

ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் வணிகர்கள் மாதம் தோறும் கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும். இந்த திட்டம் சிறிய வணிகர்கள் வரி செலுத்துவதற்கும் கணக்கு தாக்கல் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :