Advertisement

IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்

By: vaithegi Sat, 09 July 2022 5:52:50 PM

IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்

இந்தியா: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வேத்துறை இந்த துறையின் கீழ் பல இலட்சக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் மற்ற துறைகளை காட்டிலும் ரயில்வேத்துறையின் வருமானமும் அதிகம்.

தற்போது மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியதால் பயணிகளின் வருகையும் உயர்ந்துள்ளது. தற்போது ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த ஐஆர்சிடிசி இணையதளம் வந்தது முதல் டிக்கெட் எடுப்பதில் இருந்து வந்த குறைகள் களையப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தொடர்ந்து தற்போது ரயில் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

trains,tickets ,ரயில்கள் ,டிக்கெட்

அதன்படி இனி பயணிகள் ரயில் பயணத்தின் போது ஏதேனும் தகவல் அல்லது புகார்களுக்கு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் ரயில், ரயில் நிலையம் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் தகவல், பார்சல் விசாரணை, பொதுத் தகவல், புகார் நடவடிக்கை நிலை போன்ற வசதிகளும் இதில் கிடைக்கும்

இந்த ஹெல்ப்லைன் எண் பதிவுசெய்யப்பட்ட குரல் அமைப்பு ஆகும். அதனால் இதில் பயணிகள் பல மொழிகளில் தகவல்களைப் பெற முடியும். ரயில் வருகை, புறப்பாடு, டிக்கெட் முன்பதிவு போன்றவற்றிற்கு 139 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். இந்த திட்டம் மூலம் இனி ரயில் பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

Tags :
|