Advertisement

வாட்ஸ்அப்பிலும் புதிய பாதுகாப்பு அம்சம் வெளியீடு

By: vaithegi Wed, 16 Aug 2023 6:56:21 PM

வாட்ஸ்அப்பிலும் புதிய பாதுகாப்பு அம்சம் வெளியீடு

இந்தியா: வாட்ஸ்அப் அக்கௌன்ட்டை யாரும் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியீடு ..Whatsapp நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்டுகளை வழங்கியபடி இருந்து கொண்டு வருகிறது.

அதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நான்கு டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டது.எனவே இதன் மூலமாக whatsapp எளிமையான முறையில் ஹேக் செய்யப்படும் என பயனர்களின் மத்தியில் அச்சம் நிலவி வந்தது.

feature,whatsapp ,அம்சம் ,வாட்ஸ்அப்

இதனால், பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக இமெயில் வெரிஃபிகேஷன் என்னும் அம்சத்தை whatsapp அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, whatsapp அக்கவுண்ட்டை லாகின் செய்ய வேண்டும் எனில், உங்களது ஈமெயில் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்படும்.

அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தவுடன் வாட்ஸ்அப் அக்கவுண்டை லாகின் செய்யும்படியாக அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற அம்சங்கள் ஏற்கனவே instagram போன்ற தளத்தில் வழங்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

Tags :