Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் ஆப்பிரிக்காவில் புதிய கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் புதிய கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்

By: Nagaraj Tue, 29 Dec 2020 8:25:47 PM

தென் ஆப்பிரிக்காவில் புதிய கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்

புதிய கடுமையான கட்டுப்பாடுகள்... தென் ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஜனாதிபதி சிரில் ரமபோசா புதிய கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று முதல் உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 21:00 முதல் 06:00 வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும். மற்றும் மது விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. குறைந்தது ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

hospitals,new corona,fast-spreading,authorities ,மருத்துவமனைகள், புதிய கொரோனா, வேகமாக பரவும், அதிகாரிகள்

இதுதொடர்பாக ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறுகையில், ‘தொற்றுநோய்களில் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதிய 501.V2 மாறுபாடு இப்போது தென்னாப்பிரிக்காவில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய தொற்றுகளின் அதிகரிப்பு பெரும் எச்சரிக்கைக்கு ஒரு காரணம்’ என கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் வைரஸின் புதிய, வேகமாக பரவும் மாறுபாடு கண்டறியப்பட்டதாக சமீபத்தில் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் சேர்க்கைகளில் பெரும் உயர்வு இருப்பதாகக் கூறியுள்ளன.

Tags :