Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு

By: Nagaraj Sun, 26 July 2020 10:30:37 AM

கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய கருவியை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. இதன் வாயிலாக ஒரு மணிநேரத்தில் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் பரிசோதனைக்கு மிகவும் குறைந்த செலவே ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கண்டறிய தற்போது ஆர்டி-பிசிஆர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பதுடன், இவற்றை கையாள்வதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக துல்லிய தன்மையுடன் கொரோனா முடிவுகளை தெரிவிக்கும் புதிய கருவியை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

kharagpur,test,corona,virus infection,accuracy ,காரக்பூர், பரிசோதனை, கொரோனா, வைரஸ் தொற்று, துல்லியம்

இந்தக் கருவியால் கொரோனா வைரஸ் தொற்றை துல்லியமாக உறுதிசெய்ய முடியும். இதை கையாள்வதும் எளிது. அதனால் குறைந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் கூட இதை பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் எடுக்கப்படும் பரிசோதனைக்கு மிக குறைவாக ரூ.400 வரையே செலவாகும். மேலும், அதிகபட்சம் ஒருமணிநேரத்தில் சோதனை முடிவுகளை பெறலாம். இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|