Advertisement

கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை

By: Nagaraj Sat, 27 June 2020 8:17:20 PM

கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் டி-செல்களை பாதிக்கிறது. இதனைத் தடுக்க எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஒரு புதிய வழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் 10 கொரோனா நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். .

corona,patients,treatment,resistance,scientists ,கொரோனா, நோயாளிகள், சிகிச்சை, எதிர்ப்பு சக்தி, விஞ்ஞானிகள்

இவர்கள் அனைவருமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் 10 ஆரோக்கியமான நபர்களில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது டி-செல்கள் தாக்கப்பட்டுள்ளன.

சைட்டோகைன் என்ற ரசாயனத்தை இந்த டி-செல்கள் சுரக்கின்றன. இவை மருத்துவ குணங்கள் கொண்டது. இதன்மூலம் ஓரளவுக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Tags :
|