Advertisement

Whatsapp பயனர்களை கவரும் நோக்கில் புதிய அப்டேட்

By: vaithegi Tue, 07 Mar 2023 7:13:23 PM

Whatsapp பயனர்களை கவரும் நோக்கில் புதிய அப்டேட்

இந்தியா: இனி வாய்ஸ் மெசேஜ்களையும் Status வைக்கலாம் ...இன்றைக்கு பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட வேலைகளுக்கும் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் பயனர்களுக்கு உதவும் வகையில் வாட்ஸ் அப் நம்ப தகுந்த சிறந்த செயலியாக இருந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை அவ்வபோது வெளியிட்டு கொண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்ததுள்ளது.

update whatsapp ,அப்டேட்,Whatsapp

இதையடுத்து வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். இதில் வீடியோக்களை அதிகபட்சமாக 30 செகண்டுகள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.

இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போன்று இனி வாய்ஸ் நோட்களையும் 30 செகண்ட்கள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் இன்று முதல் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டும் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

Tags :