Advertisement

Whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்

By: vaithegi Mon, 20 Mar 2023 2:11:13 PM

Whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்

இந்தியா: பீட்டா அமைப்பிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பல மில்லியக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் வாடிக்கைகையாளர்களுக்கு ஏற்ப பல அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு அப்டேட் அறிவிக்கப்பட்டது. அதாவது, புதிதாக ஒருவர் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதி பெற வேண்டும்.

update whatsapp ,அப்டேட்,Whatsapp

மேலும், புதிதாக வாட்ஸ்அப் குரூப்பில் இணைய இருக்கும் நபரின் விவரங்களும் தெரிவிக்கப்படும் என்கிற அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அப்டேட் கூடிய விரைவில் iOS மற்றும் Android பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் புதிய அப்டேட்களை அறிவித்திருக்கிறது.

அதாவது, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அறிவிப்பு குழுவை “Home ” என்று மறுபெயரிட்டுள்ளது. மேலும், iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அறிவிப்பு குழுவை “Update” என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலமாக எவ்வித பிழையும் இல்லாமல் புதிய அனுபவத்தினை பெற முடியும்.


Tags :