Advertisement

Whatsapp பயனர்களுக்கான புது அப்டேட்

By: vaithegi Mon, 07 Aug 2023 3:41:26 PM

Whatsapp பயனர்களுக்கான புது அப்டேட்

இந்தியா: வாட்ஸ்அப் பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை தரும் வகையில் அனிமேஷன் அவதார் எமோஜிகளை ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது ...Whatsapp நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி கொண்டு வருகிறது.

அதாவது, சமீபத்தில் தெரியாத நபர்களின் காலை மியூட் செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மூலமாகவே சொந்த குரலில் வீடியோவினை பகிர்வது என்று பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து Whatsapp வெளியிட்டு வந்தது.

update,whatsapp ,அப்டேட்,Whatsapp

மேலும் இது மட்டுமல்லாமல், மொபைலை மாற்றும்போது வாட்ஸ்அப் ஹிஸ்டரி அனைத்தையும் புதிய போனிற்கு மாற்றும் படியான அப்டேட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் கூடுதல் சேவைகளை வழங்கும் பொருட்டு அனிமேஷன் அவதார் வடிவில் எமோஜிக்களை பகிரும்படியான சேவைகளை உருவாக்கி உள்ளது.

மேலும், தற்போதைக்கு இந்த அப்டேட் Whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதையடுத்து ஓரிரு நாட்களில் அனைத்து Whatsapp பயனர்களும் இந்த அப்டேட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Tags :
|