Advertisement

டிவிட்டரை பற்றி எலான் மஸ்க் கொடுத்த புது அப்டேட்

By: vaithegi Fri, 19 May 2023 11:34:22 AM

டிவிட்டரை பற்றி எலான் மஸ்க் கொடுத்த புது அப்டேட்

இந்தியா: டிவிட்டரில் 2மணி நேரம் வரையில் ஓட கூடிய வீடியோவை பதிவிடலாம் என எலான் மஸ்க் அறிவிப்பு ....

டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிரபலங்களுக்கு இலவச ப்ளூ டிக் என்பதை நீக்கி கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் என்று கொண்டு வந்தார்.

அதன் பிறகு ஆடியோ கால், வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார் .இதையடுத்து எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

update,twitter ,அப்டேட்,டிவிட்டர்

அதாவது அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கும் ப்ளூ டிக் கணக்காளர்கள் 2 மணிநேரம் வரையில் ஓட கூடிய வீடியோ பதிவை , 8ஜிபி வரை அளவு வரையில் அனைவரும் பார்க்கு வகையில் பதிவேற்றி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கான அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தபடவுள்ளது.

இதனை பார்த்த டிவிட்டர்வாசிகள், இனிமேல் முழு நீள படத்தை இதில் பதிவேற்றலாம். அதே போன்று திரைப்படத்தை இதில் பார்த்துக்கொள்ளவும் செய்யலாம் என கூறி கொண்டு வருகின்றனர்.

Tags :
|