Advertisement

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

By: vaithegi Mon, 21 Nov 2022 4:27:06 PM

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

இந்தியா: புதிய அப்டேட் ... இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் செயலி மூலம் மக்கள் எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சாதாரண மெசேஜர் செயலியாக மட்டும் இருந்து வந்த வாட்ஸ் அப் செயலி தற்போது வணிகத்திற்கும் பயன்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வாட்ஸ் அப்பில் அம்சங்கள் அதிகரித்து விட்டது.

அதாவது முதலில் 256 பேர் மட்டுமே குரூப்பில் சேர முடியும் என்ற எண்ணிக்கை வரம்பு இருந்தது. அதன் பின் இந்த எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாட்ஸ் அப் குழுவில் 1,024 நபர்கள் வரை இணையும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

whatsapp update , வாட்ஸ் அப்,அப்டேட்

இதனை அடுத்து இந்த அப்டேடுகளுக்கு மத்தியில் மெட்டா பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் டைமர் ஆப்ஷன், once view ஆகிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய வீடியோ பதிவு முறை அமலாக உள்ளது. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது நீண்ட நேர வீடியோ எடுப்பது பயனர்களுக்கு சிரமமாக இருந்து வந்த நிலையில் இதன் மேம்படுத்த பட்ட அப்டேட் வரவுள்ளது. அது என்னவெனில் வாட்ஸ் அப் வீடியோ பதிவில் ஷட்டர் பட்டன் என்ற புதிய ஆப்சன் காட்டப்படும். அதை கிளிக் செய்து எளிதாக இனி வீடியோ எடுக்கலாம்.


Tags :