Advertisement

வாட்ஸ்அப்-ல் புதிய அப்டேட்

By: vaithegi Tue, 19 July 2022 6:43:34 PM

வாட்ஸ்அப்-ல்  புதிய அப்டேட்

இந்தியா: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான அம்சங்களை அறிமுகம் செய்தபடி இருக்கிறது. நாளுக்கு நாள் புதிதாக எந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள பல பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கூட வீடியோ கால் மூலமாக இலவசமாகவே தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் இது மட்டுமல்லாமல், அண்மையில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும் வசதியை வழங்கியது. மேலும், சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை குரூப் அட்மின் நீக்கும்படியான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்

எனவே இதன் மூலமாக தேவையில்லாமல் செய்தி பரவுவது தவிர்க்கப்படும். மேலும், வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பல பில்லியன் கணக்கான மக்கள் அனைத்து விவரங்களையும் வாட்ஸ்அப் மூலமாகவே பகிர்ந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் தெரியாமல் அனுப்பிவிடும் பதிவை இருவருக்குமே தெரியாமல் நீக்க Delete for everyone ஆப்சன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பதிவை நீக்கம் செய்ய Delete for everyone ஆப்சன் 8 நிமிடங்கள் 16 நொடிகள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்திற்க்கு பிறகு 1 நொடி தாமதமாக செய்தால் கூட Delete for me மட்டுமே செய்ய முடியும். இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக நீட்டிக்க வாட்ஸ்அப் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய update கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|