Advertisement

வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட்

By: vaithegi Sun, 03 July 2022 2:27:07 PM

வாட்ஸ்அப் செயலியில்  புதிய அப்டேட்

இந்தியா: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்தில் அவ்வபோது பல்வேறு விதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியின் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை குரூப் அட்மின் டெலிட் செய்து கொள்ளும்படியான வசதி அப்டேட் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் செயலி மூலமாக வேறு ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தியை அனுப்பிவிடும் சமயங்களில் அந்த குறுஞ்செய்தி எடிட் செய்து கொள்ளும் வசதியையும் கூடிய விரைவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.

whatsapp,update ,வாட்ஸ்அப் ,அப்டேட்

மேலும், தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்து எந்த தகவலை அந்த பயனாளருக்கு அனுப்ப வேண்டுமோ அதை எடிட் செய்து அனுப்பலாம். கூடிய விரைவில் இந்த அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வர இருக்கிறது.

எடிட் செய்து கொள்ளும் வசதி போக ஏற்கனவே வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியை தவறாக அனுப்பிவிடும் சமயங்களில் அதனை Delete For everyone செய்து கொள்ளும்படியான வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த Delete For everyone செய்யும் வசதி 8 நிமிடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இக்கால அவகாசத்தை நீட்டித்து கிட்டத்தட்ட 2 நாட்கள் வரைக்கும் Delete For everyone செய்துகொள்ளும்படியான அப்டேட்டை தற்போது வழங்கியுள்ளது.

Tags :