Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்ஆப்பில் மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் தொடர்பான புதிய அப்டேட் வெளியீடு

வாட்ஸ்ஆப்பில் மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் தொடர்பான புதிய அப்டேட் வெளியீடு

By: vaithegi Mon, 26 June 2023 3:50:18 PM

வாட்ஸ்ஆப்பில் மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் தொடர்பான புதிய அப்டேட் வெளியீடு

இந்தியா: வாட்ஸ்ஆப் செயலியில் இனி Large Stickers ..... whatsapp நிறுவனம் தொடர்ந்து பல பல அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்கு தகுந்தார் போல வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. பொதுவாகவே whatsapp செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சமீபத்தில் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியினை whatsapp நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அப்டேட் பயனர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் தொடர்பான புதிய அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.

whatsapp,emoji,stickers ,வாட்ஸ்ஆப்,எமோஜி ,ஸ்டிக்கர்கள்

அதாவது, whatsapp செய்தியில் சாதாரணமாகவே ஹார்ட் உள்ளிட்ட சில எமோஜிகள் மட்டும் பெரிய அளவில் அனுப்பமுடியும். அதேபோன்று தற்போது ஸ்டிக்கர்களையும் பெரிய அளவில் அனுப்பும்படியான புது அப்டேட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது லேப்டாப் அல்லது கணினி வழியில் whatsapp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து பெரிய அளவிலான ஸ்டிக்கர்களை அனுப்பும் இந்த புதிய அப்டேட் சில மெட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|