Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு, பொங்கல் விழா

வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு, பொங்கல் விழா

By: Nagaraj Mon, 09 Jan 2023 10:10:16 PM

வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு, பொங்கல் விழா

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் தலைமை வகித்து பேசுகையில், கடந்த கால மற்றும் கொரோனா காலகட்டத்தில் நெருக்கடியான காலநிலையில் பணியாற்றிய பணியாளர்கள் கடந்து வந்த பணிச்சூழலை நினைவு கூர்ந்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆண்டின் துவக்கத்தினை வரவேற்கும் வகையிலும் அரசு அலுவலகங்களில் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடும் நடைமுறையை பின்பற்றி இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

மருத்துவ பணியாளர்கள். மருத்துவர்களை வாழ்த்தியும் சால்வை அணிவித்தும் கேக் வெட்டியும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

staff,govt hospital,participation,pongal festival,celebration ,பணியாளர்கள், அரசு மருத்துவமனை, பங்கேற்பு, பொங்கல்விழா, கொண்டாட்டம்

வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் மதியம் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு. அகிலன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஏற்பாடுகளை வல்லம் பொறுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சுகப்ரியா, பல் மருத்துவர் அபிராமி, இயன்முறை சிகிச்சை நிபுணர் ரம்யா, மருந்தாளுணர் ஶ்ரீநிவாசன்,வட்டார சுகாதர மேற்பார்வையாளர் சிங்காரவேலு, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜெய்சங்கர்.

பகுதி சுகாதார செவிலியர் சந்தியாகுமாரி, செவிலியர் ரஹ்மத், சுகாதார ஆய்வாளர்கள் தனபால், அகீஸ்வரன், அலுவலக பணியாளர்கள் ஆனந்தி, பிரபு, ஆய்வக நுட்புணர் தாரணி, மருத்துவமனை பணியாளர் முருகேசன், ஆரஞ்ச், ஓட்டுநர் குருசாமி, தன்னார்வலர்கள் தீனதயாளன், மொய்தீன் மற்றும் பலர் செய்திருந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags :
|