Advertisement

சென்னைக்கு இன்று , நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்

By: vaithegi Sun, 01 Jan 2023 11:26:27 AM

சென்னைக்கு இன்று , நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: சிறப்பு பஸ்கள் இயக்கம் . .... பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது.இதையடுத்து நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று புத்தாண்டை கொண்டாடி விட்டு வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள்.9 நாட்கள் விடுமுறை முடிந்து பெரும்பாலானவர்கள் நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வார்கள்.

இதனால் பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. அதிலும் குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

special buses,chennai ,சிறப்பு பஸ்கள் ,சென்னை

எனவே அதன்படி திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 500 சிறப்பு பஸ்களும், நாளை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பஸ்கள் இயக்கப்படும்.

இதனை அடுத்து பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:- சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்றவர்கள் இன்று மற்றும் நாளை மீண்டும் சென்னை திரும்புவார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம் என அவர்கள் கூறினர்.

Tags :