Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டிடங்களின் அழுத்தத்தால் நியூயார்க் நகரம் மூழ்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கட்டிடங்களின் அழுத்தத்தால் நியூயார்க் நகரம் மூழ்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Wed, 24 May 2023 11:29:15 AM

கட்டிடங்களின் அழுத்தத்தால் நியூயார்க் நகரம் மூழ்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: கட்டிடங்களின் அழுத்தத்தால் மூழ்குகிறது... வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எர்த் 'ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் இதுகுறித்த ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன.

flood risk,thesis,new york city,sea level ,வெள்ள அபாயம், ஆய்வறிக்கை, நியூயார்க் நகரம், கடல்நீர்மட்டம்

அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீட்டர் அளவு நியூயார்க் நகரம் மூழ்கிவருவதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயார்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|