Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என நியூசிலாந்து அறிவிப்பு

100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என நியூசிலாந்து அறிவிப்பு

By: Nagaraj Mon, 10 Aug 2020 09:57:17 AM

100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என நியூசிலாந்து அறிவிப்பு

100 நாட்களாக கொரோனா இல்லை... நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமெரிக்கா அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளது. நியூசிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

new zealand,corona,vulnerability,100 days ,நியூசிலாந்து, கொரோனா, பாதிப்பு, 100 நாட்கள்

இதனால் தற்போது கடந்த 100 நாட்களாக நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட கூடாது என எச்சரித்துள்ள நியூசிலாந்து அரசு, வியட்னாமில் 3 மாதங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், திடீரென Danang நகரில் பலருக்கு தொற்று பரவியதை சுட்டி காட்டியுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து நியுசிலாந்து திரும்பிய 23 பேர் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|