பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க நியூசிலாந்து அரசு திட்டம்
By: Nagaraj Sat, 05 Aug 2023 7:26:43 PM
நியூசிலாந்து: சீனா ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க நியூசிலாந்து அரசு திட்டம் தீட்டியுள்ளது.
சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதன் காரணமாக பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பசிபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘நாட்டின் தற்போதைய பாதுகாப்பு செலவு பொருளாதாரத்தில் 1 சதவீதமாக உள்ளது.
நாடு தற்போது சைபர் தாக்குதல்கள், பயங்கரவாதம் போன்ற உள்நாட்டு அச்சுறுத்தல் மற்றும் எல்லை பகுதிகளில் பதற்றத்தை எதிர்கொள்கிறது. எனவே காலாவதியான போர்க்கப்பல்கள் மற்றும் ரோந்துகப்பல்களை மாற்ற வேண்டும். இதனால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது’ என தெரிவித்தார்.