Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை ஜெயித்து சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பும் நியூசிலாந்து

கொரோனாவை ஜெயித்து சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பும் நியூசிலாந்து

By: Karunakaran Tue, 09 June 2020 12:00:40 PM

கொரோனாவை ஜெயித்து சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பும் நியூசிலாந்து

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து நாடு கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளது.

இந்த நாட்டை ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிறார். நியூஸிலாந்தில் மொத்தம் 1,154 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 22 மட்டுமே உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆக்லாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் எந்த அறிகுறியும் இன்றி, குணமடைந்து வீடு திரும்பியதாக ஆக்லாந்து பிராந்திய பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

corona,jacinda ardern,new zealand,auckland ,கொரோனா,ஜெசிந்தா ஆர்டெர்ன்,நியூசிலாந்து,ஆக்லாந்து

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இந்த கொரோனா வைரஸ் நியூஸிலாந்தில் பரவியது. ஆரம்பத்திலேயே விழிப்போடு இருந்ததால், மார்ச் 25-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு நிலை எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்தி அதனை செயல்படுத்தியது. லெவல்-1 என்று சொல்லப்படுகிற இயல்பு நிலைக்கு ஜூன் 22-ந் தேதி திரும்பி விடலாம் என நியூசிலாந்து அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்பே இன்று இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.

கடந்த 17 நாட்களாக புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. இதனால் மக்கள் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பவுள்ளனர். இதுகுறித்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் கூறுகையில், நாம் பாதுகாப்பான, வலுவான நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் முந்தைய வாழ்க்கைக்கு இன்னும் பாதை எளிதாக இல்லை. ஆனால் நாம் நமது சுகாதார பதிலளிப்பில் கொண்டிருந்த உறுதியும், கவனமும் நமது பொருளாதார மறுகட்டமைப்பிலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :
|