Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 20-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் 20-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 17 Oct 2022 1:06:56 PM

இன்று முதல் 20-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17-ந் தேதி (இன்று) முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

இதையடுத்து நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளும்

rainy,puducherry,tamil nadu , மழை, தமிழகம் ,புதுச்சேரி

மேலும் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் வருகிற 20-ந் தேதி கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதை தொடர்ந்து சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவரும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|