Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு ... மக்கள் சுயகட்டுப்பாடுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் ... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

புத்தாண்டு ... மக்கள் சுயகட்டுப்பாடுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் ... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

By: vaithegi Tue, 27 Dec 2022 7:07:10 PM

புத்தாண்டு ...  மக்கள் சுயகட்டுப்பாடுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்  ...   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா பல தடுப்பு பணிகளுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இத்தொற்றிலிருந்து நாம் மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கி விட்டது.

இதனை அடுத்து தற்போது நாளொன்றுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.


minister,new year,corona ,அமைச்சர் ,புத்தாண்டு ,கொரோனா

எனவே மக்கள் தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல் கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

இதையடுத்து இது பற்றி பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழகத்தை பொறுத்தவரை புத்தாண்டு விழா கொண்டாட்டம், சமய விழாக்கள் அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை. இருந்தாலும் மக்கள் சுயகட்டுப்பாடுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

Tags :