Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மீறினால் அபராதம் ....மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மீறினால் அபராதம் ....மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

By: vaithegi Mon, 27 June 2022 11:28:33 AM

தமிழகத்தில்  பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்  மீறினால் அபராதம் ....மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

தமிழகம்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 1500-ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துளது.

மேலும், இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.பொது இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள், கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தான் தொற்று மிகவும் அதிகரித்து வருகின்றது.

tamil nadu,corona mask ,தமிழகம்,கொரோனா முகக்கவசம்

இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், மாஸ்கை சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :