Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் ரயில் ஏறும் நிலையத்தை மாற்றி கொள்ளலாம்....IRCTC அறிவிப்பு

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் ரயில் ஏறும் நிலையத்தை மாற்றி கொள்ளலாம்....IRCTC அறிவிப்பு

By: vaithegi Tue, 14 June 2022 11:16:26 PM

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும்  ரயில் ஏறும் நிலையத்தை மாற்றி கொள்ளலாம்....IRCTC அறிவிப்பு

இந்தியா: இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது IRCTC நிறுவனம் ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி IRCTC என்ற ஆப் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

irctc,booking,train tickets ,IRCTC ,முன்பதிவு , ரயில் டிக்கெட்டுகள்

மேலும் IRCTC என்ற ஆப் மூலமாக மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் IRCTCயில் கணக்கை தொடங்கி இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து இந்த கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் 2 மடங்கு கூடுதலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து IRCTC நிறுவனத்தில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ரயில் ஏறும் நிலையத்தை மாற்றி கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த வசதியை 4 மணி நேரத்திற்கு முன் மாற்ற வேண்டும். அத்துடன் இந்த வசதியை IRCTC இணையதளத்தில் “போர்டிங் பாயிண்ட் சேஞ்ச்” என்ற வசதியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

Tags :
|