Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஜனவரி 5ம் தேதி அன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வருகிற ஜனவரி 5ம் தேதி அன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 28 Dec 2022 3:28:46 PM

வருகிற ஜனவரி 5ம் தேதி அன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி : உள்ளூர் விடுமுறை ..... கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற மற்றும் மிகவும் பழமை வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும்.

இதனை அடுத்து இந்த கோவிலின் கருவறையில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் ஒரே வடிவில் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.

local holiday,kanyakumari , உள்ளூர் விடுமுறை,கன்னியாகுமரி

இதை தொடர்ந்து இக்கோவிலில் தேரோட்ட திருவிழாவானது வருகிற ஜனவரி 5ம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை காண வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அதனால் பொதுமக்கள் அனைவரும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட ஜனவரி 5ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று வேலை நாளாக செயல்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :