Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரிடம் என்ஐஏ நான்கு மணிநேரம் விசாரணை

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரிடம் என்ஐஏ நான்கு மணிநேரம் விசாரணை

By: Nagaraj Fri, 24 July 2020 10:55:17 AM

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரிடம் என்ஐஏ நான்கு மணிநேரம் விசாரணை

என்ஐஏ விசாரணைக்கு ஆஜர்... கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர் நேற்று என்ஐஏ விசாரணைக்கு ஆஜரானார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜரானார். வெளியே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல் அவர் உள்ளே சென்றார். பின்னர் விசாரணை முடிந்து, காவலர்கள் உதவியுடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அப்போதும் செய்தியாளர்கள் எழுப்பிய எவ்விதக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

secretary to the chief minister,sivasankar,investigation,nia,appeared ,முதல்வரின் செயலாளர், சிவசங்கர், விசாரணை, என்ஐஏ, ஆஜரானார்

இந்த விசாரணை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "விசாரணை நடைபெற்று வருவதால், என்ஐஏ மற்றும் சுங்கத் துறை அவரை மீண்டும் அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றனர்.

இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "என்ஐஏ அவர்களது பணியை செய்யட்டும். இதுபற்றி நான் ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ளேன்." என்றார்.

இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணையைத் தொடங்கிய சுங்கத் துறை, சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

Tags :
|