Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன செயலிகளை நீக்க மத்திய அரசுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை

சீன செயலிகளை நீக்க மத்திய அரசுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை

By: Monisha Sat, 20 June 2020 12:54:34 PM

சீன செயலிகளை நீக்க மத்திய அரசுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை

இந்திய-சீன எல்லையான லடாக் அருகே உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீனாவின் இந்த அத்துமீறலை கண்டித்து இந்தியர்கள் சமூக வலைதளங்களில் ஆவேசமாக கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சீன பொருட்களை இனி பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பாக சீன செயலிகளை அனைவரும் தங்கள் மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்துள்ளது. அதில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் இருப்பதாகவும் அதனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை சீனா மேற்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

chinese apps,ladakh,india,china,national intelligence agency ,சீன செயலி,லடாக்,இந்தியா,சீனா,தேசிய புலனாய்வு அமைப்பு

தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ள செயலிகளில் டிக்டாக், காண (GAANA மியூஸிக் ஆப் ) , யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் ஹிட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் ஆகிய செயலிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த செயலிகளில் இந்தியர்களை உளவு செய்யும் வாய்ப்பு இருப்பதால் இவைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே சீனாவின் ஜூம் செயலி மூலம் மீட்டிங் நடக்கும்போது இந்தியர்கள் பலர் கண்காணிக்கப்பட்டது தெரிய வந்ததால் அந்த செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளது.

Tags :
|
|
|