Advertisement

நீலகிரி மட்டும் கோவையில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 15 July 2022 10:14:29 PM

நீலகிரி மட்டும் கோவையில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி : தமிழகத்தில் மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும், மேலும் சில பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து வட தமிழகம் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், 48 மணி நேரம் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain,nilgiris ,கனமழை,நீலகிரி

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நாளையும், நாளை மறுநாளும் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 32சென்டி மீட்டர் அளவுக்கு மழையின் அளவு பதிவாகியுள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :