Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் நிபா வைரஸ் .. பள்ளிகள், வங்கிகளுக்கு விடுமுறை

கேரளாவில் நிபா வைரஸ் .. பள்ளிகள், வங்கிகளுக்கு விடுமுறை

By: vaithegi Wed, 13 Sept 2023 4:04:16 PM

கேரளாவில் நிபா வைரஸ்  .. பள்ளிகள், வங்கிகளுக்கு விடுமுறை

கேரளா: கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து அங்குள்ள பள்ளிகள், வங்கிகள் போன்ற அலுவலகங்களுக்கு விடுமுறை ... கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெளவால்கள், பன்றிகள் அல்லது பாதிக்கப்பட்ட பிற நபர்களின் உடல் திரவங்களின் மூலம் மற்றவர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது.

இந்த நிலையில் கேரள சுகாதார அமைச்சகம் கோழிக்கோடு மாவட்டத்தின் ஏழு கிராமங்களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து உள்ளது.இந்த பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களையும் விடுமுறை அளித்து மூடுவதற்கு உத்தரவிட்டு உள்ளனர்.

holiday,kerala,nipah virus ,விடுமுறை,கேரளா,நிபா வைரஸ்

இதையடுத்து தற்போது வரை அங்கு 2 பேர் நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ள நிலையில் 130க்கும் மேற்பட்டவர்கள் வைரல் தொற்று குறித்து பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஒரு குழந்தை மற்றும் மூத்த வயதுடைய ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நிபா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு காரணமாக தற்போது கேரளா முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் பரவி கொண்டு வருகிறது. 2018-ம் ஆண்டு முதல் முதலில் கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக நிபா வைரஸ் தொற்று பரவி வருவகிறது.

Tags :
|