Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல்

நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல்

By: Karunakaran Thu, 09 July 2020 10:31:12 AM

நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல்

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதன்பின் கடனை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி கைது செய்தனர்.

nirav modi,confiscated,financial fraud,assets ,நீரவ் மோடி, பறிமுதல், நிதி மோசடி, சொத்துக்கள்

தற்போது லண்டன் சிறையில் உள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துக்களை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நிரவ் மோடிக்கு சொந்தமாக வோர்லி மும்பையின் சமுத்ர மகால் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த 4 வீடுகள், கடலோரப் பகுதி பண்ணை வீடு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை, லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, பங்குகள் மற்றும் வங்கி வைப்புத் தொகை என மொத்தம் ரூ.329.66 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Tags :