Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிசான் கடன் அட்டை...விவசாயிகளுக்கு சீராக கடன் .. பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

கிசான் கடன் அட்டை...விவசாயிகளுக்கு சீராக கடன் .. பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

By: vaithegi Fri, 08 July 2022 07:32:35 AM

கிசான் கடன் அட்டை...விவசாயிகளுக்கு சீராக கடன் .. பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவுறுத்தினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடனான பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது.

இச்சந்திப்பில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ருபாலா, நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு அய்வு செய்தார். அத்துடன் இந்த பிரிவினருக்கு நிறுவன கடன் எவ்வாறு வழங்க முடியும்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

nirmala sitharaman,farmer ,நிர்மலா சீதாராமன்,விவசாயி

மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிசான் கடன் அட்டை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கிராமப்புற வருவாயை பெருக்கும் வகையில், கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவசாய கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்த வங்கிகளுக்கு பொதுத்துறை வங்கிகள்தான் நன்கொடையாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :